உலகின் முதல் விவசாயி இவர்கள் தானாம்! ஆச்சரியமான உண்மை

187

உலகின் பல நாடுகளில் விவசாயம் தான் முதுகெலும்பாக இருக்கிறது. விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பழமொழி!

அப்படிபட்ட விவசாயத்தை மனிதன் 12000 ஆண்டுகளாக செய்து வருகிறான் என வரலாறுகள் கூறுகிறது.

ஆனால் அதை விட பல மடங்கு ஆண்டுகளள் அதாவது, 3 மில்லியன் ஆண்டுகளாக எறும்புகள் விவசாயம் செய்து வருகிறது என்பதை நம்புவீர்களா?

ஆம், அதான் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இலை வெட்டி எறும்புகள் என்னும் எறும்புகள் இனம் தான் இதை செய்து வருகிறது.

இந்த வகையான எறும்புகள் தாவரத்தின் விதைகளை பூமியில் போட்டு அதை விதைக்க செய்கிறது. இதற்கு பலவகையான பூச்சிகளும் உதவுகின்றன.

இந்த விதைகளில் வளரும் ஒருவகை பூஞ்சைகளை வளர்த்து எறும்புகள் உணவாக உட்கொள்கிறது. மேலும் வளர்ந்த மரங்களில் இருக்கும் பழங்களையும் இந்த வகை எறும்புகள் சாப்பிடுகின்றன.

எறும்புகளானது விவசாயம் செய்வதற்கான தாவர இலைகளைத் தேடிக் கிளம்பிவிடுகின்றன. புற்றுக்குச் சரியாகத் திரும்பி வரவேண்டும் என்பதற்காக ரசாயனத்தைச் சுரந்தபடியே செல்கின்றன.

ஒவ்வொரு எறும்பும் தன்னைவிட 50 மடங்கு எடையுடைய விதைகளையும், தாவர இலைகளையும் தூக்கிக்கொண்டு வேகமாகப் புற்றை நோக்கித் திரும்பும். அப்போது பார்த்தால் இலைகள் நடப்பது போலத் தோன்றும்!

இதுமட்டுமல்லாமல், மழைக்காடுகளின் மரங்களின் சூழலியலைக் காப்பதில் இலைவெட்டி எறும்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

SHARE