காணாமற்போனோர் தொடர்பில் அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பதைத் தடுக்கும் நோக்கில் வவுனியா நகரசபை மண்டபத்தினைச் சூழ பொலிசார் குவிப்பு.

393

அனைத்துலக காணாமல் போனோர் தினம் இன்று (30.08.2014) வவுனியா நகரசபை மண்டபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை அமைச்சர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள், சகோதர இனத்தவர்கள் அதன் பிரதிநிதிகள் போன்றோர் காணாமற்போனோரை கண்டறியும் முகமாக அமைந்த நிகழ்வுகள் சுமார் 3.30மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்நிகழ்வில் சர்வதேச அமைப்புக்களிடம் எமது பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தி தமிழ்மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே அனைவரின் உரைகளும் இடம்பெற்றது.

காணாமல் போன உறவுகளின் உறவினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்வின் இறுதியில் வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வினோதராதலிங்கம் ஆகியோராவர். இதனைத் தடுக்கும் நோக்கில் 200 இற்கும் மேற்பட்ட பொலிசார் வவுனியா நகரசபை மண்டபத்தினை சூழவும் தடைக்கம்பிகள் சகிதமாக நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.  (இணைப்பு – 01)

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

தகவலும் படங்களும் :- இ.தர்சன்

TPN NEWS

SHARE