மக்களின் அன்றாட வாழ்வில் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஸ்மார்ட் கைப்பேசிகள் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றன.
இவை மருத்துவ உலகிலும் அதிக பயன்பாட்டினை வழங்குவதற்கு ஏற்றதாக மாற்றப்பட்டு வருகின்றமையும் தெரிந்ததே.
இதன் ஒரு படியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை நுணுக்குக் காட்டியாக மாற்றக்கூடிய ஸ்டிக்கர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
Blips எனப்படும் குறித்த ஸ்டிக்கர்கள் தற்போது சந்தையில் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன.
இவற்றினை கைப்பேசியின் கமெராவின் மீது ஒட்டுவதன் ஊடாக நுணுக்குக்காட்டி போன்று பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.
அதுமட்டுமல்லாது சிறிய பொருட்களை அவதானித்தல் போன்ற ஏனை செயற்பாடுகளுக்கும் பயன்படுது்த முடியும்.இந்த வருட ஆரம்பத்தில் Blips ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்படவுள்ளமை தொடர்பான தகவல் வெளியாகிருந்தது.
இந்நிலையிலேயே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை 30 டொலர்களிலிருந்து முற்பதிவு செய்த பெற்றுக்கொள்ள முடியும்.