ஆப்பிள் நிறுவனத்தின் முழு கவனமும் இப்போது iPhone 8 ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் காணப்படுகின்றது.
அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசி தொடர்பான தகவல்களும், ஊகங்களும் இப்போதே வெளியாகத் தொடங்கிவிட்டன.
இதன்படி சில தினங்களுக்கு முன்னர் வெளியான தகவலின்படி இக் கைப்பேசியின் வெளிப்பாகம் முழுவதும் கண்ணாடியினால் ஆனதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மற்றுமொரு தகவலின்படி iPhone 8 ஆனது 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினையும், வயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை KGI Securities எனும் ஒன்லைன் வர்த்தகத் தளம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஆப்பிள் நிறுவனம் மூன்று வகையான ஐபோன்களை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட கைப்பேசியும், 5.5 அங்குல அளவினைக் கொண்டதும் LCD மற்றும் OLED தொடுதிரையினைக் கொண்ட மற்றயை இரு கைப்பேசிகளையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.