ஐபோன் 6S மொடல்களில் சார்ஜ் இருந்தாலும் திடீரென ஸ்விட்ச் ஆப் ஆகும் விடயத்துக்கு ஐப்போன் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஐபோன் 6S மொடல் செல்போன்களை உபயோகபடுத்தும் வாடிக்கையாளர்களிடமிருந்து சில வாரங்களாகவே ஒரு புகார் வந்த வண்ணம் இருந்தது. அதாவது போனில் சார்ஜ் இருந்தும் கூட திடீரென ஸ்விட்ச் ஆப் ஆகிவிடுகிறது என்பது தான் அந்த புகார்.
இதற்கு தற்போது விளக்கமளித்துள்ள ஐபோன் நிறுவனம், இந்த மொடல் போன்கள் திடீரென ஆப் ஆக முக்கிய காரணம் IOS 10.1.1 இயங்குதளமும் அதன் வன்பொருள் கோளாறுகளும் தான்.
இதில் பாதுகாப்பு சார்ஜ் சார்ந்த பிரச்சனைகள் ஏதும் இல்லை என கூறியுள்ள அந்நிறுவனம், அதிக குளிர்ச்சியான பகுதிகளில் தானாக ஸ்விட்ச் ஆஃப் ஆகும் படி ஐபோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் குறைந்த வோல்டேஜ் இருக்கும் போது போனில் இருக்கும் மின்னணு பாகங்களை பாதுகாக்க முடியும் என கூறியுள்ளது.
மேலும் இந்த பிரச்சனை ஐபோன் 6S மொடலில் மட்டுமே உள்ளது என்றும் வேறு ஐபோன் மொடல்களில் கிடையாது எனவும் ஐபோன் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.