ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார்.

429

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்தப் பதவிக்கு ஓய்வு ஷெயிட் அல் ஹூசைன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஈழத் தமிழர் விடையத்தில் பல கட்டமான முடிவுகளை இலங்கை அரசுக்கு எதிராக எடுத்த நவிப்பிள்ளை, ஐ.நாவை விட்டு செல்வது ஈழத் தமிழர்களுக்கு ஒரு பாரிய பின்னடைவு தான். இன்று முதல் அவர் ஓய்வு பெறுகிறார். நாளை முதல் ஷெயிட் அல் ஹூசைன் பொறுப்பேற்க்கவுள்ளார்.

ஆனால் நல்ல விடையம் என்னவென்றால், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், படுகொலைகளை மேற்கொண்டுள்ளது. அது பல யுத்தக்குற்றங்களை இழைத்துள்ளது என்ற உண்மையை,ஷெயிட் அல் ஹூசைன் நன்கு அறிந்துவைத்துள்ளார்.

அவர் சிங்கள அரசுடம் எபோழுதும் சமரசத்தில் ஈடுபட மாட்டார் என்று புரிகிறது. இதேவேளை தான் அலுவலகத்தை விட்டுச் சென்றாலும், இலங்கைக்கு எதிரான நடவடிக்கை தொடர ஆவன செய்துவிட்டு தான் நவிப்பிள்ளை இன்று விலகுகிறார்.

SHARE