நள்ளிரவில் நடமாடும் ஆவிகள்..! மர்ம மாளிகையில் நடப்பது என்ன?

181

எம்மில் பலருக்கு பேய் இருக்கின்றதா? இல்லையா? என்ற சந்தேகம் காலம் காலமாக நிலவி வருகின்றது .

சிலருக்கு பேய்கள் , ஆவிகள் தொடர்பான நம்பிக்கை இருக்கும். பலருக்கு அவை மீதான நம்பிக்கை இல்லை. எல்லாம் கட்டுக்கதை என நினைப்பார்கள்.

உண்மையில் இவை எல்லாம் இருக்கின்றதா? என ஆராயப்போனால் பல விதமான உண்மைகளை ஆராய வேண்டி இருக்கும்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-10

குறிப்பாக பேய்களின் நடமாட்டம் இரவிலேயே காணப்படுவதாக பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றோம். பல விதமான திரைப்படங்களைப் பார்த்து ஆவிகள் தொடர்பான அதீத கற்பனைகளையும் நாம் வளர்த்து வைத்திருக்கின்றோம்.

இரவு வேளைகளில் வீதிகளில் தனியாக நடக்கும் போதும் அல்லது தனியாக வீடுகளில் வசிக்கும் போதும் பேய் தொடர்பான எண்ணங்கள் எழுவதுண்டு.

அந்த வகையில் பேய்கள் இருக்கின்றதா இல்லையா? என நாம் ஆராயப் போவதில்லை பேய்கள் தொடர்பான சில சுவாரஷ்யங்களையே பார்க்கப் போகின்றோம்

625-0-560-320-160-600-053-800-668-160-90-11

01. ஆவிகள் இரவு நேரத்தில் மிகவும் முனைப்புடன் செயல்படும். அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது வெளிச்சம் குறைவாக இருப்பதே.

பேய் போன்ற உருவெளித் தோற்றங்களுக்கு இது மிகவும் தொந்தரவாக இருக்கும். இந்த காரணத்திற்காக தான் வீடு அமைதியாக இருக்கும் நேரத்தில் பேய் தொந்தரவுகளை உணர முடிகிறது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-12

02. ஆவிகள் பல விதங்களில் வெளிப்படும். அடர்த்தியான வெளிச்சம், இருட்டு நிழல்கள், பனி மூட்டங்கள், விந்தையான தெளிவற்ற உரு போன்றவைகள் இதில் அடங்கும். முழு உடலுடன் அவைகள் வெளிப்படவும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அவை மிகவும் சாத்தியமற்றது.

03. பொதுவாக குழந்தைகள் மற்றும் மிருகங்களின் கண்களுக்கு பேய்கள் தெரியுமாம். சில குழந்தைகள் பேய்களை தங்களின் கற்பனை நண்பர்களாக எடுத்துக் கொள்வார்கள்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-13

04.மெழுகுவர்த்திச் சுடர் திடீரென நீல நிறத்தில் மாறினாலோ அல்லது எந்தவொரு காற்றுமின்றி திடீரென அணைந்தாலோ, கண்டிப்பாக அங்கே பேய்கள் உள்ளதென்று அர்த்தமாம்.

05. வெள்ளை மாளிகையில் பல பேய்கள் உள்ளது என நம்பப்படுகிறது. குறிப்பாக அபிகைல் ஆடம்ஸ் என்ற இறந்து போன பெண், தன் துணிகளை தொங்கவிட்டிருந்த கிழக்கு அறை நோக்கி அடிக்கடி செல்வதை பலர் பார்த்துள்ளனர்.

06. வூட்ரோ வில்சன் அவர்கள் தலைமைப்பதவியில் இருந்த போது, டோலி மடிசன் புதைக்கப்பட்டிருந்த ரோஜா தோட்டத்தை தோண்டுமாறு தோட்டக்காரர்களை முதலில் வந்துள்ள பெண்மணி கட்டளையிட்டுள்ளார்.

வெளியே வந்த டோலியின் ஆவி, பேய் பயத்தை அந்த தோட்டக்காரர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது. இதனால் ஒரு அடி கூட தோண்டாமல் அவர்கள் எல்லாம் தலைத் தெறிக்க ஓடியிருக்கிறார்கள். இந்த தோட்டத்தில் பூக்கள் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக பூத்து குவிந்தததாம்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-14

07. இதேப்போல் ஆபிரிக்காவின் காட்டுப்பகுதிகளிலே ஆவிகள் தொடர்பான ஆராய்ச்சிக்காக சென்ற குழு ஒன்று இன்று வரை திரும்பி வரவே இல்லையாம்.

இதுப் போன்ற நிகழ்வுகள் ஆவிகள் தொடர்பான எண்ணங்களையும் கற்பனைகளையும் எலலோரிடத்திலும் மரண பயத்தை ஏற்படுத்தி சென்று விடுகின்றன.

625-0-560-320-160-600-053-800-668-160-90-15

ஆனாலும் முழுமையான ஆராய்ச்சியில் பேய்கள் இருக்கின்றது என எத்தனையோ விஞ்ஞானிகள் நிறுபித்திருக்கிறார்கள். எத்தனையோ மனோ தத்துவவியலாளர்கள் பேய்கள் இல்லை என்றும் நிறுபித்திருக்கிறார்கள் ஆனால் இந்த கேள்விக்கு விடை மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை.

உங்களுக்கும் ஆவிகள் தொடர்பான சந்தேகம் இருந்தால் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து நிறம் மாறுகிறதா என பாருங்கள்.

சில நேரம் நிறம் மாறினால் கட்டாயம் எங்களுக்கும் சொல்லுங்கள்…

625-0-560-320-160-600-053-800-668-160-90-16 625-0-560-320-160-600-053-800-668-160-90-17

 

SHARE