வயர்லெஸ் தரவு ஊடுகடத்தல் தொழில்நுட்பத்தில் Bluetooth ஆனது பாரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தமை அறிந்ததே.
தற்போதுவரை மொபைல் சாதனங்கள் உட்பட, லேப்டொப் கணினிகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
புதிய பரிமாணங்களைக் கண்டு வரும் இத் தொழில்நுட்பத்தில் தற்போது மற்றுமொரு புரட்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது Bluetooth 5 உருவாக்கப்பட்டுள்ளது.
இத் தொழில்நுட்பமானது முன்னைய Bluetooth 4 இனை விடவும் இரண்டு மடங்கு வேகம் கூடியதாக இருக்கின்றது.
மேலும் நான்கு மடங்கு தூரத்திற்கு தரவுகளைப் பரிமாற்றம் செய்யும் ஆற்றலையும் கொண்டுள்ளது.
இந்த தகவலை BluetoothSPECIAL Interest குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இப் புதிய Bluetooth 5 தொழில்நுட்பமானது எதிர்வரும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.