பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.

423
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து இந்திய அரசாங்கத்தின் கருத்தாக இருக்காது! ஜெயலலிதா நம்பிக்கை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைதுசெய்யப்படுவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமருக்கு நேற்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தநிலையில், இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.

aaa2411

இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் தமிழக மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையானதுää மனித நேயமற்ற பயமுறுத்தும் நடவடிக்கையாகும் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

கைதுசெய்யப்படும் மீனவர்களின் படகுகள் தடுத்துவைக்கப்படுவதால் அவர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாகவும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் தமது ஆலோசனையின்படியே இலங்கை அரசாங்கம் தமிழக மீனவர்களின் படகுகளை தடுத்து வைத்துள்ளதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்து தமிழக மக்கள் மத்தியில் குறிப்பாக மீனவ சமூகம் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இது இந்திய மத்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தாக இருக்காது என்று தாம் நம்புவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுவது தமிழக அரசாங்கத்துக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜெயலலிதா தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

SHARE