சீனாவில் ரோபோக்களின் விற்பனை அதிகரித்துள்ளதால் பலர் வேலைவாய்ப்பை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சீன ரோபோட் தொழிலக கூட்டமைப்பின் தலைவர் டவோகுயி கூறுகையில், சீனாவில் கடந்த 2015ம் ஆண்டில் தயாரிப்பு துறையில் ஈடுபடுத்தப்பட்ட ரோபோக்களின் விற்பனை 68,000 ஆகும்.. இதில் சீனாவில் மட்டும் 22 257 ரோபோக்கள் தயாரிக்கப்பட்டன.
நடப்பு ஆண்டில் மட்டும் 64,000 ரோபோக்கள் விற்பனையாகி உள்ள நிலையில், எண்ணிக்கை 70,000-யைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரக்குகளை தூக்கி இறக்கு வேறொரு இடங்களுக்கு கொண்டு செல்ல என பலவற்றிற்கும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதால், பலர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.