அமேஷான் ப்ரைம் வீடியோ சேவை விஸ்தரிப்பு

196

625-500-560-350-160-300-053-800-748-160-70-7

பிரபல ஒன்லைன் வியாபார நிறுவனமான அமேஷான் ஆனது வீடியோ சேவை ஒன்றினையும் வழங்கி வருகின்றது.

அமேஷான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video) எனப்படும் இச் சேவையானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்ற ஒரு சேவையாகும்.

இச் சேவையானது தற்போது மேலும் சில நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இச் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

புதிதாக Belgium, Canada, France, India, Italy மற்றும் Spain ஆகிய நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.

இவ் அறிவித்தலை அமேஷான் நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அமேஷான் ப்ரைம் வீடியோ கணக்கு வைத்திருப்பவர்கள் நேரடியாக https://www.primevideo.com/region/eu எனும் இணையத்தள முகவரியிலோ அல்லது Android, iOS அப்பிளிக்கேஷன் ஊடாகவோ இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

SHARE