முதலாவது டோர் டெலிவரி சேவையை ஆரம்பித்தது Amazon Prime Air!

156

சிறந்த ஒன்லைன் வியாபார சேவையை வழங்கிவரும் அமேஷான் நிறுவனம் டோர் டெலிவரி எனும் வீட்டிற்கே பொருட்களை கொண்டு செல்லும் சேவையையும் வழங்கி வருகின்றது.

குறித்த நிறுவனம் ட்ரோன் வகை விமானங்களைப் பயன்படுத்தி டோர் டெலிவரி செய்யும் சேவையையும் ஆரம்பித்திருந்தது.

இந் நிலையில் Amazon Prime Air எனும் முற்றுமுழுதான ட்ரோன் வகை விமான டோர் டெலிவரி சேவையை தற்போது ஆரம்பித்துள்ளது.

இதன்படி தற்போது ஐக்கிய இராச்சியத்தில் இச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒன்லைனில் செய்யப்படும் ஆர்டர்களை 30 நிமிடங்கள் அல்லது அதற்கு குறைவான நேரத்தில் வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுக்கக்கூடிய வகையில் குறித்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கணவே மில்லியன் கணக்கான பயனர்களுக்கு பார்ஷல் டெலிவரி சேவையை அமேஷான் நிறுவனம் வழங்கிவருகின்றது.

இவ்வாறிருக்கையில் புதிய சேவை மேலும் பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் அடுத்த கட்டமாக அமெரிக்கா, ஆஸ்திரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளிலும் அதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளிலும் இச் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

SHARE