பலகோடி உயிரினங்கள் வாழும் இடம் தான் பூமி, இது யதார்த்தம்! சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் பூமியும் ஒன்று, இது அறிவியல்!
பூமியில் பல்லி, பாம்பு, ஆடு, மாடு போன்று 87 லட்சம் உயிரினங்கள் உள்ளது. பூமியில் ஆதி காலத்தில் தோன்றிய உயிரினங்கள் அனைத்துமே இப்போது காணப்படுவதாக சொல்ல முடியாது. பல்வேறு காரணங்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்த உயிரினங்கள் பல உண்டு.
இந்த பூமி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதிலிருந்து பல உயிரின பேரழிவுகளை சந்தித்துள்ளது.
பூமியின் முதல் பேரழிவு 44 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் கண்டங்கள் அனைத்தும் ஒரே நிலப் பிண்டமாக இருந்த போது நிகழ்ந்தது. அப்போது நிலப்பகுதிகளை விட கடல் பகுதியில் தான் அதிக உயிரினங்கள் இருந்தன.
கடலின் அதிகமாக பகுதி பனியால் மூடப்பட்டதால் பேரழிவு ஏற்பட்டு உயிரினங்களில் 85% அழிந்துபோயின.
அடுத்த பேரழிவு 29 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததில் கடல்களில் இருந்த உயிரினங்களில் 96% அழிந்தது, நிலப் பகுதியில் 70% உயிரினங்கள் அழிந்தன.
அடுத்த அழிவு 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தன, இந்த அழிவுக்கு பின்னர் தான் டைனோசர் உயிரினங்கள் தோன்றியது.
சுமார் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ராட்சத விண்கல் ஒன்று பயங்கர வேகத்தில் பூமியில் வந்து மோதியதில் டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து போனது.
மீண்டும் இதே போல பூமியில் விண்கற்கள் விழுந்தாலோ, மிகபெரிய எரிமலை வெடித்தாலோ அதிலிருந்து பெரும் தூசி படலம் தோன்றி சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கும் வெப்பம் குறைந்து அதனால் பருவநிலை பாதிக்கப்பட்டால் பல உயிரினங்கள் உணவின்றி பட்டினி சாவு அடையக்கூடும்.
இனி பேரழிவு வந்தால் அதற்கு மனிதனின் செயல் தான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆம், அதிகம் காணப்பட்ட சிட்டு குருவிகள் இப்போது தென்படுகிறதா? யானைகள் பல கொல்லபடுகின்றன, குறைந்து வரும் இனங்களான புலிகள் கூட வேட்டையாடப்பட்டு வருகின்றன.
இப்போது சொல்லுங்கள், நாம் தானே அடுத்த பேரழிவை உருவாக்க முயல்கிறோம்?