கடந்த ஏப்ரல் மாதத்தில் Physarum Polycephalum எனப்படும் திரவ பாயி விரும்பத்தகாத தூண்டல்களுக்கு எதிர்ச்செயல்களை காட்டியதை French விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர்.
இது நரம்பியல் விஞ்ஞான உலகிற்கு பெரும் உலுப்பலாகவே இருந்தது.
சில மாதங்கள் கடந்து தற்போது மேற்படி விஞ்ஞானிகள் அப் பதார்த்தம்இன்னுமொரு அதேபோன்ற பாயியுடன்இணைவதன் மூலம் அப்பாயிக்கு தகவல்களை கடத்தக்கூடியது என கண்டுபிடித்துள்ளனர்.
மஞ்சள் தன்மையான இப் பாயி amoeba வினை ஒத்த தனிக்கல அங்கிகளின்சமுதாயம் என சொல்லப்படுகிறது.
இந் நுணுக்குக்காட்டிக்குரிய நுண்ணிய கலங்கள் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய சமுதாயத்தை தோற்றுவிக்கின்றன.
பொரும்பாலும் இப் பாயிமரங்களடந்த பகுதிகளில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றன. அங்கு அவை Fungi, Bacteria மற்றும் அழுகும் பதார்த்தங்களை உட்கொண்டு வாழ்கின்றன.
இப் பாயி அசையக்கூடியது. அது மணித்தியாலத்திற்கு 4 சென்டிமீட்டர் தூரம் அசையக் கூடியது.
இம்முறை பாயியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மூன்று பாயிகளை ஒன்றாக இணைத்து ஆய்களை ஆமற்கொண்டிருந்தனர். அதில் ஒன்று உப்பு பதார்த்தத்தினை தடையாக உணர்த்ப்பட்ட பாயி.
ஆய்வு முடிவில் மற்றைய பாயிகளும் உப்பினை தடையாக உணர்ந்து செயற்பட்டமை அறியப்பட்டிருந்தது.