சிறந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வரும் Lenovo நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
Lenovo Phab 2 Pro எனும் இக் கைப்பேசியினை முதன் முதலாக சீனாவில் அறிமுகம் செய்து வைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
குறித்த கைப்பேசியானது 6.4 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய IPS தொழில்நுட்பத்தினாலான திரையினைக் கொண்டுள்ளது.
மேலும் Qualcomm Snapdragon 652 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
தவிர 16 மெகாபிக்சல்களை உடைய அதி வினைத்திறன் வாய்ந்த பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, நீடித்து உழைக்கக்கூடிய 4050mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
இக் கைப்பேசியின் விலையானது 575 டொலர்களாக இருப்பதுடன் சீன நாணயப் பெறுமதியில் 3,999 யுவான்கள் என்பது குறிப்பிடத்தக்கது.