உலக நாடுகளை எச்சரிக்கவே நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது:

672

உலக நாடுகளை எச்சரிக்கவே நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் அல்காய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவரும் பின்லேடனின் மருமகனுமான அபு காய்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவம் தொடர்பாக மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் அபு காய்துக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை ஆஜராகி அவர் தெரிவித்ததாவது:

இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவத்துக்கு பிறகு, என்னைச் சந்திக்க பின்லேடன் விரும்பினார். இதனையடுத்து காந்தஹாரில் (ஆப்கானிஸ்தான்) இருந்து 3 மணிநேரம் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள குகை ஒன்றுக்கு சென்றேன். அங்கே இருந்த பின்லேடன், என்னிடம் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்துக்கு காரணமானவர்களில் நாமும் (அல்காய்தாவும்) ஒருவர் என்றார்.

பிறகு இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று என்னிடம் கருத்து கேட்டார். அதற்கு நான், இந்த தாக்குதலை நடத்தியது நீங்கள்தான் என்பது நிரூபணமானால், உங்களை கொல்லும் வரையிலும், ஆப்கானிஸ்தானில் இருக்கும் தலிபான் அரசை அகற்றும் வரையிலும் அமெரிக்கா ஓயாது என்று தெரிவித்தேன்.

அதற்கு என்னைப் பார்த்து, “நீ எதிலும் குறை காணும் நபர்’ என்று பின்லேடன் தெரிவித்தார். நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தை தகர்த்து, உலக நாடுகளை எச்சரிக்க பின்லேடன் விரும்பினார். அதற்காகவே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவம் குறித்து முன்கூட்டியே எனக்குத் தெரியாது. தொலைக்காட்சி செய்திகள் மூலமே தெரிந்து கொண்டேன்.

2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலணிக்குள் வெடிகுண்டை மறைத்து வைத்து விமானத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று அபு காய்த் கூறியுள்ளார்.

குவைத்தை சேர்ந்த அபு காய்த், பின்லேடனின் இளைய மகள் பாத்திமாவை திருமணம் செய்துள்ளார். கைது செய்யப்படுவதற்கு முன்பு, பின்லேடனின் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்தார்.

11-1378888171-twin-tower765-600-jpg.jpg

உலக வர்த்தக மையத்தின் தென்கோபுரம் 56 நிமிடங்கள் எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது.
11-1378888207-twin-tower545-600-jpg.jpg

உலக வர்த்தக மையத்தின் வடகோபுரமோ மொத்தம் 102 நிமிடங்கள் எரிந்து நொறுங்கியது.
11-1378888239-twin-tower5656-600-jpg.jpg

இந்த கொடூர சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 2983. நெஞ்சை பிளக்கச் செய்த இந்த தாக்குதலின் 12வது ஆண்டு நினைவையொட்டி பல்வேறு அமைதி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
11-1378888270-twin-towers-600.jpg

முதல் விமானம் வட கோபுரம் மீது அமெரிக்க நேரப்படி 8.46 மணிக்கு மோதியது. அந்த நேரத்திலும் பின்னர் தென் கோபுரம் மீது தாக்குதல் நடந்த 9.03 மணிக்கும் நகரம் முழுவதுமே அமைதி கடைபிடிக்கப்படுகிறது.
11-1378888318-twin-tower7667-600-jpg.jpg

பென்டகன் மீது விமானம் மோதிய 9.37, தென் கோபுரம் விழுந்த 9.59, வட கோபுரம் சரிந்த 10.28 ஆகிய நேரங்களிலும் அமைதி கடைபிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செப்டம்பர் 11 தேசிய நினைவக வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன.
11-1378888366-obama-67-600.jpg

வாஷிங்டனில் அதிபர் ஒபாமா, பென்டகனில் நடைபெறும் நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
11-1378888639-twintower6565-600-jpg.jpg

இவை அல்லாமல் 911memorial.org என்ற இணையதளம் சார்பாகவும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

TPN NEWS

SHARE