நான் சிகப்பு மனிதன் – விமர்சனம்

768

நார்கோலெப்ஸி என்கிற மூளை நோயால் அவதிப்படும் விஷால் வாழ்க்கையில் இன்பத்தையும், துன்பத்தையும் முழுவதுமாய் பார்க்காமல் தூங்கி விழுகிறான். இவனுக்கு ஏற்படும் சில கோர நிகழ்ச்சியால் எப்படி பாதிப்படைகிறான் என்பதையும் நார்கோலெப்ஸியை நோயிலிருந்து விஷாலுக்கு வரும் பிரச்சனைகளை எவ்வாறு தடுக்கிறான் என்பதே கதை.

விஷாலுக்கு என்றே 10 ஆசைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ’தெருவுல தனியா நடக்கணும்’.என்பதாகும். அந்த ஆசையை நிறைவேற தனியாக வெளியே வரும் விஷால், தனது நார்கோலெப்ஸியில் நோயால் நடுரோட்டில் விழுகிறார். செத்த பிணம் என்று கூறி லட்சுமி மேனனிடம் காசை வாங்கி கொண்டு மயில்சாமி ஓடி விடுகிறார். இதன் மூலம் விஷாலின் ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் லட்சுமி மேனனுக்கும் காதல் வருகிறது. ஒருநாள் விஷாலின் நோயை சமாளிக்கும் வழியை கண்டுபிடித்து அதன் மூலம் இருவரும் சேர்ந்துவிட லட்சுமி மேனன் கர்ப்பமானார்.

இப்படி போய் கொண்டிருக்கும் போது அந்த நான்கு பேர் கதையில் எண்ட்ரி ஆகிறார்கள். காரில் பேசிக் கொண்டே செல்லும் லட்சுமி மேனனும், விஷாலும் வலுக்கட்டாயமாக அவர்களுக்கே தெரியாமல் பாதி கட்டப்பட்ட பாலத்தில் செல்ல வைக்கிறது அந்த மர்ம கும்பல். இவர்களை பின் தொடரும் அந்த இன்னொரு கார் இவர்கள் முன் வந்து சடார் பிரேக்கை அடிக்கிறார்கள் இதனால் அதிர்ச்சியில் அப்படியே தூங்கிவிடுகிறார் விஷால். தன் வாழ்க்கையை நாசமாக்கிய அந்த நான்கு பேர் யார் என்றே தெரியாமல் அவர்களை தேடி செல்லும்போது படம் டாப் கியரில் பறக்கிறது. தூக்கத்தில் இருந்த விஷால் எப்படி அந்த நான்கு பேரையும் கண்டுபிடித்தார்?. அவர்களை அனுப்பியது யார்? என்ற உண்மை தெரியவரும் போது நமக்கே கொஞ்சம் ஷாக்காகத் தான் இருக்கிறது.

விஷால் தனது அடுத்த படத்திலும் லட்சுமி மேனனை ஜோடியாக்கி மீண்டும் ஹிட் அடித்திருக்கிறார். இப்படத்தில் ஸ்ரீனிவாசனும், இனியாவும் சில நேரங்களே வந்தாலும் தனது பங்கை சரியாக செய்திருக்கிறார்கள். இதில் விஷால் கூடவே படம் முழுவதும் வருகிறார்கள் ஜெகனும், சதீஷும். சரண்யா பொன்வண்ணனும், ஜெய்பிரகாஷ் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

இசை ஜி.வி.பிரகாஷ் குமார் பின்னணி இசையில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. ஒவ்வொரு பாடலிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன். க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி படத்திற்கு பெரிய ப்ளஸ் தான். மொத்தத்தில் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் வெற்றி விஷால் இயக்குநர் திரு மேல் வைத்திருந்த நம்பிக்கையாகும்.

SHARE