இந்த பெண் சொல்வதை கேட்டால் வாயடைத்து போவீர்கள்! நிலநடுக்கத்தை உணர முடியுமாம்

194

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் மூன் ரிபாஸ்(31), நடனக்கலைஞரான இவருக்கு இயற்கையிலேயே ஒரு சக்தி உள்ளது.

ஆம், உலகில் நடைபெறும் ஒவ்வொரு நிலநடுக்கத்தையும் அவரால் உணர முடியும். அவர் தன் கையில் சீஸ்மிக் சென்சார் என்ற சிறிய கருவியைப் பொருத்தியிருக்கிறார்.

தோலுக்கு அடியில் இருக்கும் இந்தக் கருவி, ஆன்லைன் சீஸ்மோ கிராப் உதவியுடன் இயங்க, உலகின் மூலை முடுக்குகளில் அதிரும் நிலநடுக்கங்களை துல்லியமாக சொல்லிவிடுகிறார்.

இவர் தன் அனுபவங்களை கூறுகையில், மனிதர்கள் மட்டும் அங்குமிங்கும் அசைவதில்லை. இந்த பூமி உருண்டை கூட தினமும் சுற்றுகிறது, ஆடுகிறது, இதை நாம் உணராமல் இருக்கிறோம்.

இதனுடன் சேர்ந்து செயல்ப்பட நான் விரும்பினேன். அதற்காக அசூர உயரத்தில் வளர்ந்து நிற்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினேன்.

அந்த சென்சாரை என் உடலில் பொருத்திய பிறகு பத்து நிமிடத்துக்கு ஒரு முறை பூமி அதிர்வதை கூட என்னால் உணரமுடிகிறது.

நிலநடுக்கத்தின் தன்மையைப் பொறுத்து, என் உடலும் குலுங்கும். நேபாளத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, நள்ளிரவில் என் உடல் அவ்வளவு நடுங்கியது. நானே நேபாளத்தில் இருந்ததுபோல உணர்ந்தேன்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் மக்களின் உணர்வுகளை நானும் உணர்கிறேன். இரண்டாவது இதயம் போல சீஸ்மிக் சென்சார் எப்போதும் என்னுள் துடித்துக்கொண்டே இருக்கிறது.

பூமியைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தால் பூமிக்கும் அதில் வாழும் மனிதர்களுக்கும் நல்லது.

பூமியை அறிந்துகொள்வதற்காகவே இன்னும் பல பரிசோதனைகளை என் உடலில் நிகழ்த்த இருக்கிறேன் என கூறியுள்ளார்.

நடனம் தான் என் தொழில் என்றாலும், என்னிடம் இந்த விசித்திர சக்தி இருப்பதால் பலர் நடன நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட தயங்குகிறார்கள் என சிறிய புன்னகையுடன் கூறுகிறார் மூன் ரிபாஸ்!

SHARE