தசைக்கலங்களுக்கு வலுவளிக்கும் செயற்கைப் பதார்த்தம்

156

தற்போது விஞ்ஞானிகள் தானாக சிகிச்சையளிக்கக்கூடிய, நீட்சியடையக்கூடிய, ஒளிபுகக்கூடிய செயற்கைப் பதார்த்தம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இப் பதார்த்தம் தசைகளுக்கு சக்தியை வழங்கப் பயன்படுத்தக்கூடியன என சொல்லப்படுகிறது.

இதன் முடிவுப்பொருளானது ரப்பர் போன்றது, மென்மையானது, குறைந்த செலவில் தயாரிக்கப்படக் கூடியது.

இது அதன் ஆரம்ப நீளத்திலும் 50 மடங்கு நீட்சியடையக்கூடியது. அறை வெப்பநிலையில், வெறும் 24 மணி நேரத்திலேயே உடலில் ஏற்படும் வெட்டுக்காயங்களிலிருந்து தானாகவே மீட்சிடையக்கூடியது.

இப் பதார்த்தம் அயன்களை கடத்தக்கூடியது. இதனால் அது மின்னைக் கடத்தக்கூடியது. இவ்வியல்புகளுடன் இது போன்ற பதார்த்தம் கண்டுபிடிக்கப்பட்டமை இதுவே முதல் முறை.

இங்கு மூலக்கூறுகளுக்கிடையே அயன் அழுத்தம் காணப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது மூலக்கூறுகளின் ஒரு புறம் நேர் அழுத்தமும், மறுபுறம் மறை அழுத்தமும் காணப்படுகிறது.

உயர் உப்புச்செறிவுள்ள பதார்த்தத்தை, நீட்சியடையக்கூடிய பல்பகுதியத்துடன் கலந்து மேற்படி தமக்கு தேவைான இயல்புகளை பெற முடிந்ததாக விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள்.

இதன் மின் கடத்து தன்மையால் இப்பதார்த்தம் மின் தூண்டல்களை உணர்ந்து செயற்படக்கூடியது.

இதன் விபரங்கள் Advanced Materials எனும் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE