ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றும் 60 பெண்கள்

410
சிரியா மற்றும் இராக்கில் தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்த கடுமையாகப் போராடிவரும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் உள்ள ஷரியா காவல் பிரிவில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 60 பெண்கள் பணியாற்றிவருவதான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சிரியாவின் ரக்கா நகரத்தில் செயல்பட்டுவரும் இந்த அல் கன்சா பிரிவு போராளிகளின் கட்டுப்பாட்டில் அவர்களின் தலைமையகமாக செயல்பட்டுவருகின்றது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பிரிவானது பெண்கள் வேடத்தில் பணி புரியும் ஆண்களைக் கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த பிரிவினரில் தனியார் கல்வியில் பயின்று கடந்த நவம்பர் மாதம் சிரியாவிற்குத் தப்பிச் சென்ற 20 வயது நிரம்பிய கிளாஸ்கோ பகுதியின் அக்சா மக்மூதுவை குறிப்பிடத்தக்க புள்ளியாக பிரிட்டனை மையமாகக் கொண்ட சர்வதேச ஆய்வு மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் இவர்களில் பெரும்பாலானோர் 18 லிருந்து 24 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் மூன்று பேர் ராணுவப்பிரிவில் பணியாற்றி வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் இவர்கள் பயங்கரவாதச் செயல்களில் தொடர்பு கொள்வதில்லை என்றும் இவர்களுக்கு மாதச் சம்பளமாக 161 டாலர் வழங்கப்படுகின்றது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, உம் அல் ரயான் என்ற மற்றொரு பெண்கள் குழுவும் இதே சமயத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக ‘இன்டிபெண்டன்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

SHARE