சிறிலங்காவின் அரச பயங்கரவாதம்: 6000 போர்க்குற்றவாளிகளின் விபரங்கள் வெளியானது

786
தமிழர்களால் முன்னெடுத்து வரப்படுகின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முத்திரை குத்தி, பன்னாட்டுச் சமூகத்தின் முன் ஒட்டுமொத்த தமிழர்களையும் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் நோக்கில் அண்மையில் சிறிலங்காவின் பேரினவாத அரசு, தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் பல தமிழ் அமைப்புக்களைத் தீவிரவாத அமைப்புக்களாக பட்டியலிட்டுள்ளது.

அதனோடு நின்றுவிடாது சிறிலங்காவின் வர்த்தமானியில் 424 தமிழர்களின் பெயர்களை வெளியிட்டு, அவர்கள் தமது பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த சொந்தமண்ணில் வாழும் அல்லது நடமாடும் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

உண்மையில் யார் பங்கரவாதிகள் என்பதை பன்னாட்டுச் சமூகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த நூற்றாண்டின் பாரிய கொடூர இனப்படுகொலையை 2005 இலிருந்து 2009 வரை சம்பூரிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை அரங்கேற்றி அதன் தொடர்ச்சியாக இன்றும்
தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்துவரும் சிறிலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதம், 2005ஆம் ஆண்டு இனப்படுகொலைச் சூத்திரதாரி மகிந்த ராஜபக்சவின் பணிப்பில்

கோத்தபாயவின் நேரடி நெறிப்படுத்தலிலும், சிறிலங்காவின் முப்படைகளினது தளபதிகளினது வழிநடத்தலிலும் 6000 காடைச் சிங்களவர்கள் அதன் கூலிப் பட்டாளங்களுக்குள் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களே சம்பூரிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழினத்தை மிகக்கோடூரமாகப் படுகொலை செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களுக்கு இதற்கென சிறப்புப் பயிற்சிகளும், ஆலோசனைகளும், திட்டங்களும் வழங்கப்பட்டு சிறிலங்காவின் அனைத்து கூலிப்பட்டாளங்களின் தொகுதிகளிற்குள்ளும் விடப்பட்டனர்.

இறுதிக்கட்டப் போரில் அகப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் எனப்பாராது தமது வக்கிரத்தை தீர்த்து படுகொலை செய்தார்கள்.

இவ்வாறு மிருகத்தனமாக, மனித உயிர்களைப் பலியெடுத்த சிறிலங்காவின் அரச பயங்கரவாதிகள் 6000 பேர்களினதும் முழுவிபரமும் எம்மால் பன்னாட்டுச் சமூகத்தின் கவனத்திற்கு விடப்படுகின்றது.

விரைவில் இவர்கள் எப்படி இனப்படுகொலை செய்வதற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்ற வீடியோ ஆதாரமும் எம்மால் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என பிரித்தானியர் தமிழர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்க்குற்றவாளிகளின் விபரங்களை வாசிக்க இங்கே அழுத்தவும்

– See more at: http://www.newstamilwin.com/show-RUmsyESaLXkrz.html#sthash.nEUr9Nb4.dpuf

SHARE