‘இது திருமண சீசன்’- நடிப்புக்கு நந்தனா முழுக்கு 

413



நடிகை நந்தனா திருமணம் முடிந்ததையடுத்து நடிப்புக்கு முழுக்குபோடுகிறார். நடிகைகளின் திருமண சீசன் ஆகிவிட்டதுபோல் தோன்றுகிறது. சமீபத்தில்தான் நடிகை அமலாபால்-டைரக்டர் விஜய் திருமணம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதையடுத்து நடிகர் பஹத் பாசில்-நஸ்ரியா நாசிம் திருமணம் நடந்தது. இவர்களைத் தொடர்ந்து ‘கிருஷ்ணவேனி பஞ்சாலை, ‘உயிருக்கு உயிராக படங்களில் நடித்த நந்தனாவுக்கு திருமணம் நடந்திருக்கிறது. தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்.

 

இவருக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஹரி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இவர்களின் திருமணம் திருவனந்தபுரத்தில் நடந்தது. ‘திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பீர்களா? என்றதற்கு நந்தனா பதில் அளித்தார். அவர் கூறும்போது,‘எங்களது திருமணம் குடும்பத்தினர் சம்மதத்துடன் நடந்தது. இனி நடிக்க மாட்டேன். பெங்களூரில் கணவருடன் செட்டில் ஆவதால் அங்கு நடன பள்ளி தொடங்கி நடத்த உள்ளேன். இதுவரை எனக்கு ஆதரவு தந்த திரையுலகினருக்கு நன்றி என்றார்

 

SHARE