நீல வண்ண வால் நட்சத்திரம் ஒன்று பூமியை அதி வேகத்தில் கடந்து செல்லும் என வானவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில் வானத்தில் இன்று நீல வண்ண வால் நட்சத்திரம் ஒன்று அதி வேகத்தில் கடந்து செல்லும் என வானவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வால் நட்சத்திரத்தால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சீர்குலையுமா? அல்லது ஆண்டின் இறுதி நாளில் வால் நட்சத்திரம் தோன்றுவது கெட்ட சகுனமா என பல்வேறு கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன.
ஆனால் அப்படி அசம்பாவிதங்கள் எதுவும் குறித்த வால் நட்சத்திரம் தோன்றுவதால் நிகழப்போவதில்லை எனவும் இது வானில் வாடிக்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வுதான் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
45P என பெயரிடப்பட்டுள்ள குறித்த வால் நட்சத்திரமானது வெற்று கண்களுக்கு புலப்படாது. மட்டுமின்றி குறித்த வால் நட்சத்திரமானது ஒவ்வொரு 5.25 ஆண்டுக்கும் ஒருமுறை வானில் தோன்றி கடந்து செல்லும் என கூறப்படுகிறது.