இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளியின் வலியின் வரிகள் காணொளி இசைத்தட்டு வெளியீடு!

527

 download (1)
நிமாலின் வலியின் வரிகள் காணொளி இசைத்தட்டு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.
இன்று (08.09.2014 திங்கட்கிழமை) செல்வபுரத்தில் நடைபெற்ற வலிசுமந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் இசைத்தட்டு வெளியிடப்பட்டது.
காணொளி பேழையின் முதல் பிரதியை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.
மக்கள் வெள்ளத்தின் மத்தியில் நடந்த மேற்படி நிகழ்வில், மக்கள் முண்டியடித்துக்கொண்டு இசைத்தட்டுக்களை பெற்றுக்கொண்டதை அவதானிக்க்கூடியதாக இருந்தது.
இரண்டு கால்களையும் இழந்த ஒருவரால் இந்த சாதனை முயற்சி இசைத்தட்டாக வடிவம் பெற்றது பலரின் வரவேற்பையும்  பெற்றது.
மேலும் நிமாலின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றதால் இன்று செல்வபுரம் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மதிப்புரை வழங்கிய யோ.புரட்சி நிமாலின் வலிகள் பற்றியும், இசைத்தட்டு தயாரிப்பாளர் நிமால் அடைந்த வேதனைகள் பற்றியும் விபரித்தார்.
 
 
SHARE