செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் இருப்பது தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் நாசா நிறுவனம் அங்கு மக்களை குடியேற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகின்றது.
இதற்கிணங்க செவ்வாய் கிரகத்தின் கால நிலைக்கு ஏற்ப வீடுகளை அமைக்க தயாராகிவருவதுடன், அதற்கான பிரேரணை வடிவங்களை உருவாக்கியுள்ளது.
இங்கு அமைக்கப்படும் வீடுகள் வெப்பத்தை தாங்கக்கூடியதாவும், உயர் கதிர்வீச்சினை தாங்கக்கூடியதாகவும் இருப்பதுடன், வளைந்த மேற்பரப்பினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
முதற்கட்டமாக இவ் வீடுகள் வானியல் ஆராய்ச்சியாளர்கள் தங்கி ஆய்வினை மேற்கொள்ளும் நோக்கத்துடன் அமைக்கப்படவுள்ளது.
இவ் வீடுகளை வேர்ஜினியாவில் உள்ள நாசாவின் Langley ஆராய்ச்சி மையம் உருவாக்கிவருகின்றது.
மேலும் குறித்த வீடுகள் மிகவும் பாரம் குறைந்தவையாகவும், இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும் இருப்பதுடன் மீள்கட்டமைக்கக்கூடிய இலகு ரக ரோபோ தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ளது.