பொதுநலவாய நாடுகள் அமைப்பின் 11 அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் பொதுநலவாய மக்கள் பேரவை ஆகியவற்றின் 11 பிரதிநிதிகள் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் லலித் சந்திரதாஸ இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த சந்திப்பு அரசாங்கத்துக்கும் அரசசார்பற்ற அமைப்புக்களுக்கும் இடையில் நிகழ்த்தப்பட்ட ஆரம்ப கலந்துரையாடலாக அமைந்ததாக தேசிய சமாதான சபை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது அரசசார்பற்ற அமைப்புக்கள் அதிகாரப்பகிர்வு, காணாமல் போனோர் விடயங்கள் தொடர்பில் ஈடுபடும் போது அரசாங்கம் மேற்கொள்ளும் கண்காணிப்புக்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் அரச சார்பற்ற செயலகமும் அரச சார்பற்ற அமைப்புக்களும் ஒழுங்கின் அடிப்படையில் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அத்துடன் அரச சார்பற்ற அமைப்புக்கள் முன்கொண்டு வந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றுக்கும் பாதுகாப்பு செயலாளர் விளக்கங்களை வழங்கினார்.