மாறி வரும் கால சூழலில் உயர் ரத்த அழுத்த நோய் யாருக்கும் எப்போது வரும் என சொல்ல முடிவதில்லை. மன அழுத்தம், அதிக கோபம், தூக்கமின்மை, உடல் பருமன், தவறான உணவு பழக்கம் போன்றவற்றால் இது பெரும்பாலும் ஏற்படுகின்றது.
ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்ப்பட்டால் சில மசாஜ்களை செய்தால் அதிலிருந்து விடுபட முடியும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். திடீரென கோபத்திலோ, மன அழுத்தத்திலோ அல்லது வேறு விடயங்களாலோ உயர் ரத்த பிரச்சனை ஏற்படும் சமயத்தில் காதின் கீழ் பகுதியிலிருந்து கழுத்து பட்டை எலும்பு பகுதிவரை மெதுவாக பத்து தடவை மசாஜ் செய்யவும்.
இதை இரண்டு காதுகள் பக்கமாகவும் செய்தால் உடனடி பலன் கிடைக்கும். காதின் கீழ் பகுதியிலிருந்து அரை மீட்டர் கழுத்து எலும்பு வரையும் அதிலிருந்து முகத்தின் மூக்கு வரையிலான இரண்டு பக்க கன்னங்களிலும் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதுடன், இரத்த ஓட்டமும் உடலில் சீராக இருக்கும்.