உங்கள் ஐபோனைக் கூட மவுஸாக மாற்றலாம் தெரியுமா?

188

நீங்கள் ஆப்பிள் மேக்புக் வைத்திருக்கிறீர்களா? அதில் எப்போதாவது உங்கள் ஐபோனை பயன்படுத்தி கட்டுப்படுத்த முயன்றது உண்டா?

உங்கள் மேக் கருவியை, ஐபோன் அல்லது ஐபாட் பயன்படுத்தி ஒரு வயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோல் அமைக்க ஆப் ஸ்டோரில் ஏகப்பட்ட ஆப்ஸ்கள் இருக்கிறது.

அதில் ஒன்று தான் Remote Mouse என்ற ஆப்.

இதை பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்,
  • முதலில் உங்கள் ஐபோனில் Remote Mouse என்ற அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
  • இதே போல, இந்த பயன்பாட்டின் மேக் வெர்ஷனையும் மேக்புக்கில் பதிவிறக்கம் செய்து சாஃப்ட்வேரை ரன் செய்து கொள்ளவேண்டும்.
  • பின்பு, ஐபோனில், Remote Mouse என்ற செயலியை ஓபன் செய்து ஐபோன் மற்றும் மேக் ஆகிய இரண்டையும் இணைக்க இரண்டிலும் ‘ஸ்டார்ட்’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். (நீங்கள் வைஃபை உடன் இணைந்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது).
  • தானாக இணைப்பதில் பிரச்சனை ஏற்பட்டால், ஐபி தேடல் ஐகானை தட்டி உங்கள் மேக் புக்கின் ஐபி முகவரியை உள்ளிடாலே போதும் உங்கள் மேக் புக்கை உங்களின் ஐபோன் கொண்டு நீங்கள் கட்டுப்படுத்த ஆரம்பிக்கலாம்.
  • ஆப் ஸ்டோரில் ஏகப்பட்ட அப்ளிகேஷன்கள் இருக்கும் பட்சத்தில் குறிப்பாக இந்த செயலியை குறித்து விளக்கமளித்ததற்கு காரணம் எந்தவொரு ட்ராக்பேட் அசைவுகளையும் இந்த ஆப் தவறவிடாது என்பது தான்
SHARE