ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ள பெண்கள் சீரழிக்கப்பட்டு வருவதாக தப்பி வந்த சிறுமி ஒருவர் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஸிதி (Yazidi)இன பெண்களிடம் அதிகளவில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 3ம் திகதி யாஸிதி இன பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி சென்ற தீவிரவாதிகள் அவர்களை தனி ஒரு அறையில் அடைத்து வைத்து தினந்தினம் துன்புறுத்தி வருகின்றனர். இதுகுறித்து அவர்களின் பிடியில் சிக்கியிருந்த நரின் என்ற சிறுமி (Narin age-17) ஒருவர் தனது பெற்றோரின் மூலம் இத்தாலிய செய்தியாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் பேசியதாவது, இங்கு பெண்கள் பலர் சீரழிக்கப்பட்டு வருகின்றனர். எங்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை பெற்றோர்களிடம் தெரிவிக்க கோரி துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கொடுமை செய்கின்றனர். எனக்கு என்ன நடக்கிறது என்பதை சொல்லவே நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னுடைய பெயரை தெரிவித்துவிடாதீர்கள். நான் உடனடியாக இறந்துவிட தோன்றுகிறது. பெண்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறையில் பெரும் கொடூர சம்பவங்கள் நடக்கிறது. அங்கு பெண்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஆண்களால் கற்பழிக்கப்படுகின்றனர். பாலியல் உறவுக்கு உடன்படவில்லை என்றால் தீவிரவாதிகள் பெண்களை அடித்து கொடுமை செய்கின்றனர். அவர்களிடமிருந்து நான் தப்பித்து வந்தேன் என்றாலும் கூட அவர்கள் முன்பே என் உடலை கொன்றுவிட்டனர், தற்போது என் ஆன்மாவை கொல்கின்றனர். மேலும் 40 பெண்கள் மற்றும் சிறுமிகளை தீவிரவாதிகள் பெயர் தெரியாத நகரில் வைத்துள்ளனர் என்றும் அங்கு வைக்கப்பட்டுள்ள 12 வயது சிறுமிகள் முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் இருக்கின்றனர் எனவும் கண்ணில் நீர் ததும்ப பேட்டியளித்துள்ளார்.
TPN NEWS
|
முகப்பு |