ரஜினி என்றாலே எளிமை என்று தான் பெயர். தன் ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க வந்தால், நிதானமாக அவரிடம் ஒரு நிமிடம் நின்று பேசிவிட்டு தான் செல்வார்.
இந்நிலையில் நேற்று லிங்கா படத்தின் ஷுட்டிங் ஷிமோகாவில் நடந்தது. இதை அறிந்த ரசிகர்கள் பலர் ரஜினியை காண ஆயிரக்கணக்கில் வந்து கொண்டே இருந்தனர்.
ஆனால் சண்டைக்காட்சியில் நடித்து முடித்ததில் இடது கையில் அவருக்கு அடிப்பட்டு இருந்ததால் முதலில் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை.
பின் பெண்கள், குழந்தைகள் வந்து தனக்காக நின்று கொண்டிருப்பதை அறிந்த ரஜினி அனைவரையும் பார்த்து, பேசிவிட்டு தான் சென்றுள்ளார்.