உங்களுக்கு எங்க மச்சம் இருக்கு! செம லக் தான் போங்க

191

பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

  • முகத்தின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணின் வாழ்வில் செல்வமும், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இவர்கள் கடவுள் நம்பிக்கையில் ஆழமாக இருப்பார்கள்.
  • இதுவே இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களது வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையாது என கூறுகின்றனர். இவர்கள் மத்தியில் சுயநலம் இருக்கும். மிக செல்லமாக இருப்பார்கள்.
  • வலது புற நெற்றிப்பொட்டில் மச்சம் இருந்தால் அவர்கள் நேர்த்தியாகவும், சீக்கிரமாக திருமணம் செய்துக் கொள்பவருமாக இருப்பார்கள். இவர்களுக்கு அமையும் கணவர்களும் நல்லவர்களாக இருப்பார்கள்.
  • இடது புறத்தில் மச்சம் இருந்தால் இவர்களது திருமண வாழ்க்கை சற்று சறுக்கல்களை சந்திக்கும். புரிதல், முதிர்ச்சி இல்லாமல் கணவன் – மனைவி இல்லற வாழ்வில் ஈடுபடுவர்கள்.

  • வலது புற கண்ணிமையில் மச்சம் இருந்தால் அவர்கள் நிதானமாக செயல்படுவார்கள். பணம் மெல்ல, மெல்ல தான் சேமிப்பார்கள். இவர்களுக்கு ஏற்படும் நெருக்கடி உடனே சரியாகிவிடும்.
  • இடது புறத்தில் மச்சம் இருந்தால், இவர்களது குணாதிசயங்கள் அவ்வளவு சிறப்பாக இருக்காது. தன்னலம் மட்டும் தான் பார்ப்பார்கள். பிறர் நலம் பார்க்க மாட்டர்கள். வாழ்க்கையில் நிலையற்று செயல்படுவார்கள்.
  • வலது கண்ணில் மச்சம் இருந்தால், அவர்கள் மிகவும் லக்கானவர்கள். செல்வம் அவர்களிடம் அதிகம் சேரும். வாழ்க்கையில் பெரிதாக சிரமப்பட மாட்டார்கள். இன்பமான வாழ்க்கை அமைந்து காணப்படுவார்கள்.
  • இடது கண்ணில் மச்சம் இருந்தால், அவர்கள் எதையும் பெரிதாக எண்ண மாட்டார்கள். இவர்களது அணுகுமுறை காரணத்தாலேயே திருமண வாழ்வில் சிக்கல்கள் உண்டாகலாம்.
  • மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு வெடுக்கு வெடுக்குன்னு கோபம் வரும். சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் முறைப்பார்கள். ஆயினும், மற்றவர்களை அதிகம் மதிப்பார்கள். சமூகத்தில் நல்ல பெயர் பெற்றிருப்பார்கள்.

  • மூக்கின் வலது புறத்தில் மச்சம் இருப்பவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள். இதுவே இடது புறத்தில் இருந்தல அவர்கள் சற்று பதட்டத்துடன், சௌகரியங்கள் குறைந்தும் காணப்படுவார்கள்.
  • மேல் இதழில் மச்சம் இருந்தால், அவர்கள் காதலில் சிறந்து விளங்குவார்கள். ஆடம்பர வாழ்க்கை அமைய வாய்ப்புகள் உண்டு. சுய கருத்தை, குரலை உலகம் கேட்கும்படி ஈடுபடுவார்கள்.
  • கீழ் உதட்டில் மச்சம் இருந்தால், அவர்கள் கிரியேட்டிவ் நபராக இருப்பார். இந்த பெண்கள் அவர்களது திறமையை உலகறிய பாடுபடுவார்கள். கலை சார்ந்த விஷயங்களில் சிறந்து விளங்குவார்கள்.
  • வலது புற கன்னத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் தங்கள் குடும்பத்தை விரும்புவார்கள், வயதில் மூத்தவர்களை மதித்து செயல்படுவார்கள். வீட்டு பறவையாக இருப்பார்கள். குடுமபத்துடன் தான் அதிக நேரம் செலவிடுவார்கள்.
  • இடது புற கன்னத்தில் மச்சம் இருந்தால், அந்த பெண்கள் சற்று கர்வத்துடன் காணப்படுவார்கள். தனக்கான இடத்தில் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். அதில் யாரும் தலையிட விரும்பமாட்டார்கள்.
  • பின் கழுத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் ஆக்ரோஷமாக இருப்பார்கள். தங்கள் கனவு மெய்ப்பட வேண்டும் என்றால் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.

  • முன் கழுத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் நன்கு பாடும் திறன் பெற்றிருப்பார்கள். கலை ஆர்வம் இருக்கும். இவர்கள் சிறந்த தாய், மகள், மனைவியாக விளங்குவார்கள்.
  • வலது புற தோளில் மச்சம் இருக்கும் பெண்கள் ஸ்மார்ட்டாக, தைரியாமாக இருப்பார்கள். இடது புற தோளில் மச்சம் இருக்கும் பெண்கள் தேவையற்ற சண்டைகளில் மூக்கை நுழைக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.
  • வலது மார்பில் மச்சம் இருக்கும் பெண்கள் நிறைய பொருளாதார நெருக்கடியை சந்திப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருக்கும். பிரச்சனைகளை எதிர்த்து போராடும் குணாதிசயம் கொண்டிருப்பார்கள்.

– See more at: http://www.manithan.com/news/20170106124090#sthash.I4NXIiix.dpuf

SHARE