அறிமுகமாகின்றது LG-ன் ஸ்மார்ட் குளிரூட்டி

166

உலகிற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் நிறுவனங்களுள் LG நிறுவனமும் ஒன்றாகும்.

இந் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்ட குளிரூட்டிகளை வடிவமைத்துள்ளது.

இது தொடர்பான தகவலை Consumer Electronics Show நிகழ்வில் வெளியிட்டுள்ளது.

இக் குளிரூட்டியானது Smart InstaView Refrigerator என அழைக்கப்படுகின்றது.

LG நிறுவனத்தின் webOS இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் குளிரூட்டியானது சமையலறையில் புதிய அனுபவத்தினை வழங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் Amazon Alexa வசதியினையும் உள்ளடக்கியுள்ளமை விசேட அம்சமாகும்.

எனினும் இதன் விலை உட்பட ஏனைய சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

SHARE