தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

399

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் இது பற்றித் தெரிவிக்கையில்,

பாலச்சந்திரன் விவகாரம் குறித்து நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். இராணுவம் இதனை செய்திருக்கும் எனத் தாம் கருதவில்லை என்றும், எனினும் இது உண்மையா என்பது தனக்குத் தெரியவேண்டும் என்பதற்காக விசாரணை செய்கிறோம் எனக் கூறிய மஹிந்த ராஜபக்‌ச யுத்தத்தில் இரு தரப்பும் மோதலில் ஈடுபடும்போது யார் சுட்டிருப்பார்கள் என எப்படி தெரிவிப்பது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்தாலும் இறுதிக் கட்ட யுத்ததின் பின்னர் பாலச்சந்திரன் இடம்பெயந்து வந்து மக்களுடன் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவரை இராணுவத்தினர் பிடித்துச் சென்று தமது பதுங்கு குழிக்கு அருகில் அமர்ந்திருந்ததைப் போன்று புகைப்படம் வெளியானது.

இராணுவத்தினர் உயிருடன் பிடித்த பின்னரே சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மிக அருகில் இருந்தே பாலச்சந்திரன் மீது துப்பாகிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக புகைப்பட தொழில்நுட்ப ஆய்வு நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனால் மோதலில் கொள்ளப்படுவதற்கான சாத்தியம் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE