தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களுக்கு சில நாடுகள் உதவிகளை வழங்கி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதம் இல்லாத போதிலும்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத வலையமைப்பு உலக அளவில் தொடர்ந்தும் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மலேஷியாவின் புத்ரஜயாவில் இடம்பெற்ற 14ம் ஆசிய பாதுகாப்புச் சேவை கண்காட்சியில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளை சில நாடுகள் கண்டு கொள்வதி;ல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு வலையமைப்புக்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக போர்வையில் இந்த அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனிதாபிமான நிவாரணம் அல்லது அரசியல் செயற்பாடு என்ற போர்வையில் அநேகமான புலி ஆதரவு அமைப்புக்கள் இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த அமைப்புக்களில் உறுப்புரிமை வகித்து வரும் பலர் ஆயுதப் பயிற்சிப் பெற்ற போராளிகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானவர்கள் தொடர்ந்தும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், மறைமுகமான அடிப்படையில் மீளவும் பயங்கரவாதத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.