அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்-மஹிந்தவுக்கு – சம்பந்தன்

440

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

43f631cd23d7f04cc893dc45534a1107_XL

ஹிந்து பத்திரிகைக்கு செவ்வியளித்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், அரசாங்கத்துடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார் என்று ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துடன் பேசுவதற்கு தாம் எந்த நேரத்திலும் தயார். எனினும் அதற்கு ஒரு காலவரைறை மற்றும் சர்வதேச கண்காணிப்பு என்பவை அவசியம் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

13வது அரசியல் அமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளமை வரவேற்கத்தக்கது.

இந்தநிலையில் மாகாண பொலிஸ் அதிகாரம் என்பது, சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கே ஒழிய தாக்குலுக்கான அல்லது பாதுகாப்புக்கான அதிகாரத்துக்காக அல்ல என்பதில் தமது கூட்டமைப்பு உறுதியாக இருப்பதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொலிஸ் அதிகாரம் இல்லாத வகையில் 13வது அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவதை தமது கட்சி ஏற்றுக்கொள்ளாது என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

TPN NEWS

SHARE