முன்னணி இணைய சேவை வழங்குனர்களில் இரண்டாம் நிலையில் காணப்படும் யாகூ நிறுவனம் Blink அப்பிளிக்கேஷனை வாங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த அப்பிளிக்கேஷன் ஆனது குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படுவதுடன், அவ்வாறு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை தானாகவே அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்கள் பிரபலமடைந்து வரும் நிலையில் கடந்த பெப்பரவரி மாதம் Whatsapp குறுஞ்செய்தி அப்பிளிக்கேஷனை பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. |