கிளவுட் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு வீடியோ கான்பரன்ஸிங் சேவையை வழங்கி வரும் Blue Jeans வலையமைப்பில் புதிய அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதாவது இதுவரை காலமும் ஒரே நேரத்தில் 25 வரையானவர்களே வீடியோ கான்பரன்ஸில் இணையக்கூடிய வசதி காணப்பட்டது. எனினும் தற்போது இந்த எண்ணிக்கையானது 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏனைய வீடியோ கான்பரன்ஸிங் சேவையை வழங்கும் வலையமைப்புகளை விடவும் எதிர்காலத்தில் Blue Jeans வெகுவாக பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. |