இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டவிபூசிகா மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகாவும் அவருடைய தாயாரும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில்...

முல்லைத்தீவு நகரில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மீது பொலிஸ் கான்ஸ்டபிள்

இலங்கையில் காணாமல்போனவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் எனக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முல்லைத்தீவு நகரில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மீது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்குதல் நடத்த...

காணாமல் போனோர் ஆணைக்குழுவிடம் 18600 முறைப்பாடுகள் -அமைச்சர் டலஸ் அழகப் பெரும

இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரின் போது காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 18,600 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனை குறித்த ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த ஜனாதிபதி...

யாழ்ப்பாணத்திலும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர் சமூகம் சீரழிகின்றது.- நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போதைப் பொருட்கள் பாரியளவில் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. யாழ்ப்பாணத்திலும்...

ரஷ்ய கடற்படையினர் இலங்கையில் விசேட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

ரஷ்யாவின் பசுபிக் பிரிவின் மூன்று கடற்படை கப்பல்கள் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. ரியர் அத்மிரல் விளடீமீர் ஏ. திம்மித்ரிவ் தலைமையிலான இந்த ரஷ்ய கப்பல்களின் அதிகாரிகள் ஒய்வுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன. மார்ஷல் ஷப்போசினிகேவ்,...

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 132 பேர்

புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தின் கருத்தின்படி, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 132 பேர் தற்போது புனர்வாழ்விற்குள்ளாகி வருகின்றனர். 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் ஏறத்தாழ 12,000 விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள்...

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. காவல்துறை அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய விடயங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய...

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அஸ்கிரி பீடம்

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அஸ்கிரி பீடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடாது 13ம் திருத்தச் சட்டத்தை உடனடியாக அரசாங்கம் ரத்து செய்ய வேண்டுமென அஸ்கிரி பீடத்தின் சிரேஸ்ட...

அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஆளும் கூட்டணியை கட்டியெழுப்ப உதவியவர்கள். -மேர்வின் சில்வா

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை உருவாக்க அர்ப்பணிப்புகளை மேற்கொண்ட அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமை இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.   கொழும்பில் நடைபெற்ற...

இலங்கை குறித்த விசாரணைக்குழுவினை நவனீதம்பிள்ளை அறிவிப்பார்!

எதிர்வரும் 10ம் திகதி இலங்கை குறித்த விசாரணைக் குழுவினை ஐக்கிய நாடு;கள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பெயரிட உள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி மனித...