யாழ்.தேவி புகையிரதத்தில் அமைச்சர் தலைமையிலான குழுவினர் பயணம் செய்தனர்.
யாழிற்கான புகையிரத சேவை ஆரம்பித்து வைக்கப்படவுள்ள நிலையில் அதன் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு 11.10.2014 - சனிக்கிழமையாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை மறுதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து...
எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள கூட்டமைப்பு தயார்!- பா.உ அரியநேத்திரன்
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் சரி, பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரிஎதையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாக தமிழ்த் தேசிய
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்தல் தொடர்பான செய்திகள் பரவலாக பேசப்பட்டு வரும் இந்தக்காலகட்டத்தில் தேர்தல்தொடர்பாக கருத்துக் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலே எப்போது எந்தத்தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினராகிய நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். எந்த நேரத்தில் எவ்வாறான முடிவினைஎடுக்க வேண்டும் என்பதனை எமது தலைமை முடிவு எடுக்கும். அது தமிழ்மக்களை மையப்படுத்தியதாகவேஅமையும்.
நாங்கள் பல தேர்தல் களத்தினை கண்டவர்கள் எமது மக்கள் எம்முடன் இன்று நேற்றல்ல பல தசாப்தங்களாகஇருந்து அனைத்து தேர்தல்களிலும் எம்மை வெற்றி பெறச்செய்தவர்கள் என்பதுதான் வரலாறு. அதேபோன்றுதான் இனிவரும் தேர்தல்கள் எதுவாக இருந்தாலும் அதிலும் எம்மக்கள் எம்முடன் இருந்து செயற்பட்டு எமதுகட்சியை வெற்றி பெறச்செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் எமக்கில்லை.
அரசாங்கம் எந்தளவிற்காவது தமிழர்களது பலத்தினை குறைக்க வேண்டும் என்பதற்காக கோடிக்கணக்கில்பணத்தினை அள்ளி கொட்டி தமிழர்கள் என்று கூறிக்கொண்டு அரசாங்கத்துடன் தங்களது சுகபோகத்திற்காகஇருப்பவர்களை களத்தில் இறக்கி, எமது தமிழ் மக்களின் வாக்குகளை சூரையாட நினைப்பதுதான்காலாகாலமாக நடந்து வரும் செயற்பாடாகும்.
அந்த வகையிலே தான் தேர்தலை இலக்கு வைத்து வட, கிழக்கில் பலர் இறக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்தவகையிலே மட்டக்களப்பிலே அமைப்பாளர்கள் என்றும், அமைச்சர்கள் என்றும் பலர் மக்களின்வரிப்பணத்தினைக்கொண்டு வந்து பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
எமது மக்கள் வெறுமனே நீண்டு நிலைக்காத அபிவிருத்திக்காக ஆசைப்பட்டவர்கள் அல்ல. மாறாக அனைத்துஉரிமைகளுடனும் கூடிய நிரந்தர அபிவிருத்தியை எதிர்பார்த்து ஏங்கி நிற்பவர்கள். அவர்களுக்கான நிரந்தரஇறுதித்தீர்வு கிடைக்கும் வரை எமது கட்சி அவர்களுக்காகவே களத்தில் நின்று போராடும்.
ஒவ்வொரு தமிழனும் தன்மானத்துடன் இந்த நாட்டிலே வாழ வேண்டும் அதற்காகத் தான் 65 வருடங்களாக பலதியாகங்களை செய்திருக்கின்றோம் அந்தத் தியாகங்களுக்கான தீர்வு தொலைவில் இல்லை. நிச்சயமாக எமதுவிடுதலைப்பயணம் தற்போது சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த சூழலில் தான் தமிழ்த் தேசியகூட்டமைப்பு எடுக்கும் முடிவுக்குப் பின்னால் அனைத்து தமிழர்களும் அணிதிரள வேண்டும்.
இவர்களது வேலைத்திட்டங்களுக்கு விலை போகாதவர்களாகவும் தமது இனத்தின் விடுதலையினை என்றும்மதித்து செயற்பட்டவர்களாகவும் எமது தமிழ் இனம் தொடர்ந்து இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
(தில்லை)
மஹிந்தவை காட்டுமிராண்டியென ஒப்பிட்டு பேசிய வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் – அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடும் கண்டனம்
மஹிந்தவை காட்டுமிராண்டியென ஒப்பிட்டு பேசிய வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம். நேற்றைய வடமாகாணசபையின் அமர்வில் முள்ளிவாய்க்காலில் நடந்து வரும் நில சுவீகரிப்பு தொடர்பாக சிவாஜிலிங்கம் பேசிக்கொண்டிருக்;கையில் இது...
அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யாது ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது பாதகமான நிலைமையை ஏற்படுத்தக் கூடும் என இடதுசாரி கட்சிகள்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட தயாராக வருகின்றன.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் தரப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள்...
முதலமைச்சர் விக்னேஸ்வரன் முட்டாள் என்றுஅரசிற்கு வக்காளத்து வாங்கும் அமைச்சர் டக்ளஸ்!
ஜனாதிபதியை வரவேற்க நீங்கள் அனைவரும் வருகை தந்தால் மட்டுமே உங்களுக்கு ஆசிரியர் சேவை தரம்-3-ஐஐ வழங்கப்படும் எனக் கூறி வன்னி ஆசிரிய உதவியாளர்களை மிரட்டும் அமைச்சர் டக்ளஸ். வடமாகாண முதலமைச்சரை முட்டாள் என்றும்...
சப்ரகமுவ பல்கலைக்கழககத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது மற்றொரு பிரிவினர் தாக்குதல்
சப்ரகமுவ பல்கலைக்கழககத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது மற்றொரு பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலின் போது கூரான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இதனால் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலின்...
வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு முன்பாக மௌன ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் இன்று (10.10.2014) 10.45 மணியளவில் சட்டவிரோதமாக குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி 211 நாட்கள் தடுத்துவைத்துள்ள விஜயகுமாரி உட்பட ஏனையோர் தொடர்பாக இம்மௌன போராட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு பதாதைகளை ஏந்தியவாறு வவுனியா...
படையினர் எமக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்று தமிழ் மக்கள் ஒருபோதும் கூறவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
படையினர் எமக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்று தமிழ் மக்கள் ஒருபோதும் கூறவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபையில் இன்றைய தினம் காணி தொடர்பிலான விசேட அமர்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்...
வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையை பார்வையிட அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட குழூவினர்
வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையை பார்வையிட்டு, அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள சிகிச்சைப்பிரிவுகள் தொடர்பாக கலந்துரையாடியபோது அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட குழூவினர்
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் மீது தாக்குதல்
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கிருஸ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது இன்று (08.10.2014) இரவு நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு சமீபமாக வைத்து கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10.10.2014 வெள்ளிக்கிழமை...