சாண வண்டுகள்(Dung Beetle) அதனுடைய பெரும்பாலான காலங்களை சாணங்களை தேடுவதிலும், அதை உருண்டையாக்கி இரவு ஊட்டலுக்காக எடுத்துச் செல்வதிலும் செலவிடுகிறது.
இதில் நம்பமுடியாத விடயம் எதுவெனில், நீண்ட நாள் உணவு தேடலின் பின் அவை தம் இருப்பிடத்திற்குச் செல்ல, பழைய கால வான்வெளி வழிகாட்டலையே பயன்படுத்துகின்றன என்பதாகும்.
விஞ்ஞானிகள் இச் சாண வண்டுகள் வழிகாட்டலுக்காக தனித்துவமான நுட்பங்களை பயன்படுத்துவதை பல வருடங்களாக உணர்ந்திருந்தனர்.
ஆனால் அதை அவர்களால் சரியாக தெரிந்திருக்க முடியவில்லை. ஆனால் அண்மைய ஆய்வுகள், இவ்வண்டுகள் இரவில் வான் நட்சத்திரங்களை மையப்படுத்தியே தமக்குரிய வழியினை கண்டுபிடிக்கின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர் Basil el Jundi தலைமையிலான ஆய்வொன்றிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவ் வண்டுகளால் எவ்வாறு விம்பங்கள் சேகரிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது என்பதையும் முதன்முறையாக வெளிக்கொணர முடிந்திருக்கிறது.
இதற்கென கட்டுப்பாடுக்குட்பட்ட இரவு வானத்தைப் போன்று ஒழுங்கமைக்கப்பட்ட தொகுதியில் அவ் வண்டுகள் பரிசீலிக்கப்பட்டது.
இங்கு வண்டுகள் சாண உருண்டை மீது நடனமாடுவதும் அவதானிக்கப்பட்டது. இந் நடனத்தின் போது அவை அத்தருணத்தில் வான் நிலையை பதிவுசெய்வதாகவும் கூறப்படுகிறது.
அப்பதிவு நன்றாக ஞாபகப்படுத்தப்பட்ட பின்பு அன்றைய நாளுக்காக புறப்படுகிறது. பின்னர் அப்பதிவை வைத்து வீடு திரும்புகிறது.