Electric Scooters -ன் விலை திடீரென குறைப்பு.., மாடல் மற்றும் விலை குறித்த விவரங்கள்

134

 

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகையை குவாண்டம் எனெர்ஜி (Quantum Energy) நிறுவனம் அறிவித்துள்ளது.

விலை குறைப்பு
Quantum Energy நிறுவனத்தின் Plasma வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் Plasma X மற்றும் Plasma XR ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலை 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் சமீபத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டது. இவை இரண்டும் Ex-showroom விலைகள் ஆகும்.

இந்த விலை குறைப்பானது மார்ச் 31 -ம் திகதி வரை நிலுவையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1,19,525க்கு விற்கப்பட்ட Plasma X ஸ்கூட்டரானது, விலை குறைப்பிற்கு பின்னர் 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும், ரூ.99,757 க்கு விற்கப்பட்ட Plasma XR ஸ்கூட்டரானது விலை குறைப்பிற்கு பின்னர் ரூ.89 ஆயிரத்திற்கும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Plasma X மற்றும் Plasma XR ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் ஓட்டுவதற்கு சுலபமாக இருக்கும். மேலும், இந்த ஸ்கூட்டர்களில் Powerful electric motor -களான 1500 Watt மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, 60V 50Ah Ion battery packs ஆகியவை உள்ளன.

Plasma X அதிக திறனை வெளிப்பப்படுத்தும் வகையில் இருப்பதால் 7.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும். இதன் Top speed மணிக்கு 65 கிமீ ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 110 கிமீ தூரம் பயணம் செய்ய முடியும்.

அதேபோல Plasma XR ஸ்கூட்டரின் Top speed மணிக்கு 60 கிமீ மட்டுமே ஆகும். இதன் முழு சார்ஜில் 100 கிமீ தூரம் பயணம் செய்ய முடியும்.

SHARE