ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வருகையின் பின்னர் பிட்னஸ் ட்ராக்கர் (Fitness Tracker) எனப்படும் சாதனம் உருவாக்கப்பட்டிருந்தது.
கையில் அணியக்கூடிய இச் சாதனமானது தூக்கத்தின் தன்மை, உடற் பயிற்சிகளின் தன்மை, உடலில் எரிக்கப்படும் கலோரிகள் என்பவற்றினை கண்காணிக்க உதவுகின்றன.
எனினும் இச் சாதனமானது உடல் எடையைக் குறைக்க ஒரு போதும் உதவாது என்று ஆய்வு ஒன்றின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வினை American Medical Association (JAMA) நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டிருந்தது.
இந்த ஆய்வில் உடல் எடை அதிகம் உடையவர்கள் 500 பேர் தாமாக முன்வந்து கலந்துகொண்டிருந்தனர்.
ஆய்வின் பின்னர் கருத்து தெரிவித்த ஆய்வுக் குழுவின் தலைவர் “மக்கள் உடல் எடையைக் குறக்க உதவும் சாதனங்களில் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர்” என குறிபபிட்டுள்ளார்.
ஆனால் இச் சாதனங்கள் உடலின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.