Galaxy J1 கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின

385

 

சம்சுங் நிறுவனம் J தொடரினைக் கொண்ட கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.இந்நிலையில் முதலாவது Galaxy J1 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 4.5 அங்குல அளவு, 480 x 800 Pixel Resolution உடைய தொடுதிரை, Exynos 3457 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பனவற்றினைக் கொண்டிருப்பதுடன், Android 5.1.1 Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 4GB சேமிப்பு நினைவகம், 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

SHARE