வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் Goat. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மாஸ் அப்டேட்
ஏப்ரல் மாதத்தில் இருந்து Goat படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார். குறிப்பாக இப்படத்தின் முதல் பாடல் இம்மாதம் வெளியாகும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக Goat படத்திலிருந்து வெறித்தனமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று பிரபு தேவாவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக Goat படத்திலிருந்து அவருடைய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.