Huawei நிறுவனத்தின் புத்தம் புதிய கைபேசி

304

நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி காரணமாக குறிகிய காலத்திலேயே பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இதன் அடிப்படையில் சீனாவை தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் Huawei நிறுவனமும் ஏனைய கைப்பேசி நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் கைப்பேசி ஒன்றினை உருவாக்கியுள்ளது.

இந் நிறுவனம் Mate 8, Mate 9 எனும் இரு கைப்பேசிகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இவற்றுள் Mate 9 கைப்பேசியில் தலா 20 மெகாபிக்சல்களைக் கொண்ட டுவல் (Dual) கமெராக்களை அறிமுகம் செய்கின்றது.

மேலும் இவற்றின் பிரதான நினைவகமானது 3GB RAM அல்லது 4GB RAM வரை இருக்கும் எனவும், சேமிப்பு நினைவகம் 128GB ஆகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை Mate 8 கைப்பேசியானது 6 அங்குல அளவுடையதும் 2560 x 1440 Pixel Resolution கொண்ட Quad HD தொடுதிரையினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

625.117.560.350.160.300.053.800.210.160.70 (4)

SHARE