ஒன்லைன் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கும் நிறுவனமாக திகழும் அமேஷான் தனது வர்த்தகத்தினை நாளுக்கு நாள் விரிவுபடுத்தி வருகின்றது.
இதன்படி தற்போது Hyundai காரினை ஒன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவழைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Prime Now, Drive Now எனும் புதிய வசதியின் ஊடாகவே ஹையுண்டாய் காரினை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கின்றது.
ஆர்டர் செய்த அதே நாளிலேயே காரியை டெலிவரி எடுக்கக்கூடிய வசதி காணப்படுதல் விசேஷ அம்சமாகும். எனினும் இவ்வசதி தற்போது அமெரிக்காவின் சில நகரங்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளது.
தேவைப்படின் அருகிலுள்ள Hyundai முகவர் நிலையத்தை தொடர்புகொண்ட காரின் தரம் குறித்து ஆராய்ந்த பின்னர் இவ்வாறு ஒன்லைனில் கொள்வனவு செய்ய முடியும்.
இதேவேளை Hyundai நிறுவனம் அடுத்த வருடம் Hyundai Elantra எனும் புதிய மொடல் காரினை அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு அறிமுகம் செய்யும் பட்சத்தில் அக்காரினையும் ஒன்லைன் ஊடாக கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும்.