Ind Vs Eng தொடரில் தனியொருவனாக 712 ஓட்டங்கள்., ICC சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்ற இளம் வீரர்

92

 

இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 700 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த ஆட்டக்காரராக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஐசிசி அறிவித்தது.

இரண்டு இரட்டை சதங்களுடன் 712 ஓட்டங்கள் எடுத்து ICC Men’s Player of the Month (Feb 2023) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 22 வயதான யஷஸ்வி, Kane Williamson மற்றும் இலங்கை தொடக்க ஆட்டக்காரர் Pathum Nissankala ஆகியோரை தொறக்கடித்து இந்த விருதை அவர் பெற்றனர்.

“ஐசிசி விருது கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருதுகள் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைக்கட்டும். இங்கிலாந்து தொடரை மிகவும் ரசித்தேன். அந்த ஐந்து டெஸ்ட் தொடர்கள் எனது வாழ்க்கையில் சிறந்தவை. என் பாணியில் விளையாடினேன். தொடரை 4-1 என கைப்பற்றினோம். அந்த வெற்றியை அணி உறுப்பினர்களுடன் சேர்ந்து மிகவும் ரசித்தேன்’ என்று யஷஸ்வி தெரிவித்தார்.

இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர்
யஷஸ்வி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் 1,000 ஓட்டங்களைக் கடந்துள்ளார். இதன்மூலம் இளம் வயதில் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அவர் 16 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி (Vinod Kambli) 14 இன்னிங்சில் 1000 ஓட்டங்களைக் கடந்தார்.

நயா வால் என்று அழைக்கப்படும் சத்தேஷ்வர் புஜாரா 18 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைக் கடந்தார்.

அவுஸ்திரேலிய வீராங்கனை
பெண்கள் பிரிவில் இந்த விருதை (ICC Women’s Player of the Month) அவுஸ்திரேலிய வீராங்கனை அனாபெல் சதர்லேண்ட் (Annabel Sutherland) பெற்றார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரே டெஸ்டில் சதர்லேண்ட் இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் UAE கிரிக்கெட் வீரர்களை வீழ்த்தி இந்த விருதை பெற்றார்.

SHARE