Instapaper அப்பிளிக்கேஷனை வாங்கும் Pinterest

243

இணையத்தளப் பக்கங்களை தரவிறக்கம் செய்து அல்லது சேமித்து வைத்து இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் அல்லது வசதியான நேரத்தில் அவற்றைப் படிக்கக்கூடிய வசதியை தரும் ஒரு அப்பிளிக்கேஷனே Instapaper ஆகும்.

இவ் அப்பிளிக்கேஷனை iPhone, iPad, Android, Computer, மற்றும் Kindle ஆகிய சாதனங்களில் நிறுவிப் பயன்படுத்த முடியும்.

தற்போது இந்த அப்பிளிக்கேஷனை புகைப்படங்களை பகிர்ந்து மகிழும் வசதியை தரும் முன்னணி வலைத்தளமான Pinterest கொள்வனவு செய்யவுள்ளது.

625.500.560.350.160.300.053.800.748.160.70 (7)

Instapaper அப்பிளிக்கேஷன் ஆனது 3 வருடங்களுக்கு முன்னர் Marco Arment நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு Betaworks நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே தற்போது Pinterest நிறுவனம் கொள்வனவு செய்து முற்றிலும் ஒரு சுதந்திரமான அப்பிளிக்கேஷனாக அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷனில் எழுத்துக்களை ஹைலைட் செய்யும் வசதி, எழுத்துருக்களை ஒலி வடிவத்திற்கு மாற்றும் வசதி, விரைவாக வாசிக்கக்கூடிய வசதி உட்பட மேலும் பல வசதிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE