iOS டூ Android? முதலில் இதனை தெரிந்துகொள்ளுங்கள்!

202

625-500-560-350-160-300-053-800-748-160-70-8

இப்போது ஒவ்வொரு மாதமும் பல்வேறு நிறுவனங்கள் தமது ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றன.

இவற்றில் தரப்படும் புதிய சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் காரணமாக கைப்பேசி பிரியர்களும் அடிக்கடி தமது கைப்பேசிகளை மாற்றி வருகின்றனர்.

இப்படியானவர்களுக்கு தற்போது கூகுள் நிறுவனம் ஒரு வரப்பிரசாதத்தை தந்துள்ளது.

அதாவது iOS இயங்குதளத்தில் செயற்படக்கூடிய கைப்பேசிகளை பாவித்துவிட்டு Android இயங்குதள கைப்பேசிகளுக்கு மாறுபவர்களுக்கே இந்த வரப்பிரசாதம்.

இதன்படி iOS சாதனத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்து தரவுகளையும் கூகுள் ட்ரைவ் ஊடாக பேக்கப் செய்துவிட்டு மீண்டும் Android சாதனத்தில் அத் தரவுகளை சேமித்துக்கொள்ள முடியும்.

கூகுள் ட்ரைவின் ஒரே கணக்கினைப் பயன்படுத்தி புகைப்படங்கள், தொலைபேசி இலக்கங்கள் உட்பட அனைத்து தரவுகளையும் இடம்மாற்றிக்கொள்ள முடியும்.

 

SHARE