IPhone தண்ணீரில் விழுந்துவிட்டால் உடனே நீங்கள் செய்ய வேண்டியவை

128

 

உங்களது ஐபோன் (iPhone) தண்ணீரில் விழுந்துவிட்டால் நீங்கள் அதனை எப்படி காய வைக்க வேண்டும் என்பதை பற்றிய தகவலை பார்க்கலாம்.

சில சமயங்களில் உங்களது ஐபோன் எதிர்பாராவிதமாக தண்ணீரில் விழுந்துவிடும் அல்லது மழையில் நனைந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த மாதிரி நேரங்களில் நீங்கள் செய்ய வேண்டியவை இவை தான்.

Disconnect செய்யுங்கள்
உங்களது iPhone தண்ணீரில் விழுந்தவுடன் சார்ஜரில் அல்லது வேறு ஏதேனும் சாதனத்துடன் தொடர்பில் இருந்தால் உடனே Disconnect செய்யுங்கள். ஏனென்றால், Short circuit அல்லது மின்சார பாதிப்பு ஏற்படுவதை தடுக்க உதவியாக இருக்கும்.

தண்ணீரை அப்புறப்படுத்துக
உங்கள் ஐபோனின் connector கீழே பார்த்து இருக்குமாறு ஐபோனை மெதுவாக தட்டுங்கள். இப்படி செய்யும் போது போனில் உள்ள தண்ணீர் அல்லது ஈரம் வெளியே வந்துவிடும்.

உலர வையுங்கள்
நல்ல காற்று வசதி இருக்கும் இடத்தில் ஐபோனை காய வைக்க வேண்டும். அப்போது தான் போனில் இருக்கும் ஈரப்பதம் ஆவியாக மாறி வெளியேறும்.

பொறுமை
சிலர் ஐபோன் தண்ணீரில் விழுந்தவுடன் பதற்றமடைந்து உடனே போனை ஆன் செய்வார்கள் அல்லது சார்ஜ் செய்வார்கள். அவ்வாறு உடனே செய்ய கூடாது. ஈரம் காய்வதற்கு 30 நிமிடங்களாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருந்தால் connector அல்லது கேபிள் பின் மாட்டும் இடங்களில் ஈரம் உள்ளது என அர்த்தம். அது காய்வதற்கு ஒரு நாள் வரை ஆகும்.

விபரீத முறை
உங்களது ஐபோன் தண்ணீரில் விழுந்தவுடன் உலர்த்துவதற்காக ஹேர் ட்ரையர் அல்லது ஹீட்டர் பயன்படுத்த வேண்டாம். இதில் உள்ள வெப்பம் உங்களது போனின் உள்பாகங்களை பாதிப்படைய செய்யும்.

சர்வீஸ் மையம்
மேலே சொன்ன அனைத்து விடயங்களையும் செய்த பின்னர் உங்களது போன் சரியாகவில்லை என்றால் அதிகாரபூர்வ ஐபோன் சர்வீஸ் மையங்கள் அல்லது டெக்னீசியன் உதவியுடன் சரிசெய்யுங்கள்.

SHARE